“Visitor Q”(2002) திரைப்படம் குறித்தான ஒரு பார்வை

அறிமுகம்   ஜப்பானிய திரைச்சூழலில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தொடர்ச்சியாக கல்ட் (Cult) திரைப்படங்களை உருவாக்கிக் குவிக்கும்  இயக்குனர்  Takashi Miike, 1991 அறிமுகமானதிலிருந்து கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.பெரும்பாலும் சர்ச்சைக்குரிய என்று வகைப்படுத்தப்படும்  திரைப்படங்களுக்கான தேவையும் தனி ரசிகர் பட்டாளங்களும் உருவாகி பெருகிவளர்ந்து கொண்டிருக்கிறது. வி-சினிமாத்துறைனுள் (V-Cinema industry) குறைந்த செலவில், கையிலுள்ள வளங்களைக் பயன்படுத்தி  மாத்திரம்  உருவாக்கப்படும் Direct-to-video பாணியில் தணிக்கைக்குளுக்களின் தலையீடின்றி மும்முரமாகவும் சுதந்திரமாகவும் வருடத்திற்கு ஏழு படங்கள் வரையில் இயக்கும் சாத்தியப்பாட்டை நிகழ்த்தி ஜப்பான் சுயாதீன இயக்குனர்களில் தவிர்க்கவியலாதவொரு இடத்தைப் பெற்றிருக்கிறார்  இயக்குனர் டக்காஷி மிக்கே. ஒளிவுமறைவில்லாமல் வன்முறைகள், நிர்வாணக் காட்சிகளை பதிவு செய்தல், பார்வையாளர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வன்முறைச்  சூழல்களை தோற்றுவித்தல் இயக்குனரின் பிரதான போக்கு எனலாம். குறிப்பாக ஜப்பான் சமூகத்தின் இளைஞர்களின் அத்துமீறல் போக்கு, குடும்ப அமைப்பு, பாலின அரசியல், வன்புணர்வு,பாலியல் சிக்கல்கள், Bullying, சாமுராய்கள் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பானில் பிரத்தியேகமாக உருவான யக்குசாக் குழுக்களின் வாழ்வியல் என ஏகப்பட்ட தளங்களை தயவு தாட்சண்யமின்றி அப்பட்டமாக விமர்சிக்கிறார். பெரும்பாலான திரைப்படங்களில் கதைக்களங்கள் Bullyingஐயே மையப்படுத்தியமைந்திருக்கும். இன்னும் காமிக்ஸ்களை திரையாக்கும் பாணியும் விரவிக்காணப்படும். திரைப்படங்கள் பேசும் கருத்தியலின் அடர்த்தியை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள மிக ஆர்வமூட்டும் அதே சமயம் அதிர்ச்சியை மேலோங்கச்செய்யவும் தவறவிடவில்லை. ஒரு திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்ட வன்மக் காட்சிகளை பிற திரைப்படங்களில் கண்டுகொள்ளமுடியாத அளவுக்கு புதுப்புது யுக்திகளை வன்மங்களை Read More