‘சைக்கோ’ திரைப்படம் வெளியாகிய முதல் வாரத்தில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட மிஷ்கினின் அதிக வசூல் திரைப்படமாகவும் இது உருமாற வாய்ப்புள்ளதோ என்று தோன்றுகிறது.இங்கு வெளிவந்து கொண்டிருக்கும் சினிமாக்களின் மத்தியில் ‘சைக்கோ’ கையாண்டிருக்கும் கதைக்களம் வேறெந்த தமிழ் திரைப்படத்துடனும் ஒப்பிட இயலாத ஒரு தனியிடத்தைக் கோருகிறது. வெற்றிப் படங்களை உருவாக்குகிறேன் என்கின்ற பேர்வழியில் திரும்பத் திரும்ப வழமைக்கு மாற்றமில்லாத ஒரே மாதிரியான திரைப்படங்களை உருவாக்கும் மசாலா நடைமுறையிலிருந்து சைக்கோ எந்தளவிற்கு தூரம் சென்றுள்ளது என்பதில் சந்தேகம் உள்ளது. அதாவது, கதைக்கருவின் மையத்தின்பால் பார்வையாளர்கள் கடுமையாக ஈர்க்கப்பட்டதனாலோ என்னவோ முக்கியத்துவமற்றதாகக் கருதப்படும் படத்தின் இதர பகுதிகளை படக்குழுவினர் மேம்போக்குத்தனத்துடன் கையாண்டிருப்பதனைப் படத்தைக் கொண்டாடும் பார்வையாளர்கள் உண்மையிலேயே கவனிக்கவில்லையா அல்லது அவர்கள் கண்டும் காணாதது போல பாவனை செய்கின்றனரா எனத் தெரியவில்லை. இத்தகைய வழக்கமான தமிழ் சினிமாப்பாங்கில் சற்றும் அடிபிரளா காட்சிகள் முதல் பாதியில் ஏராளம். நாயகர் கவுதமுக்கும் தாகினிக்கும் இடையில் காதல் உருவாவதை காண்பிக்கும் காட்சிகள் முதற்கொண்டு,தாகினி கடத்தப்படும் இடம் வரை காட்சிப்படுத்தப்பட்டவைகள் யாவுமே மிஷ்கின் கோரும் மாற்று/ஆத்தேர் சினிமா ரகத்துக்கு எந்த அளவுகோல்களிலும் பொருந்தாதவை. தமிழ் சினிமாவில் காலங்காலமாக தூக்கிப்பிடிக்கப்படும் பெண்ணுடற் பண்டமாக்கலை முன்னிறுவித்தான் பார்வையாளர் மனங்களில் நாயகியின் அழகை இயக்குனர் பதிய வைக்கிறார். ஒரு நூலகத்திற்குள் ஸ்லீவ்லஸ் ஆடையை அணிவித்து, இடுப்பை இங்குமங்குமாக ஆட்டி ஆட்டி அவரை நடக்கச் செய்து என இவற்றையெல்லாம் கண்டு ஆர்ப்பரித்த பார்வையாளர் கூட்டத்தை இறுதியில் Read More
what will people say (2017)
“கலாச்சார மோதல்களும் முரண்களும் என்றைக்கும் முடிவற்றது”. கீழைத்தேய நாடுகளிலிருந்து பொருளாதார மட்டத்தில் செழிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளை மாத்திரம் நோக்காக கொண்டு புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெற்றோர் மற்றும் அவர்களின் சந்ததியினர் எதிர் நோக்கும் மிகப்பெரும் சவால்களில் ஒன்று கலாச்சார முரண்களும் அவை சார்ந்த அடக்குமுறைகளும். ஐரோப்பா செல்லும் பெரும்பாலரின் நோக்கம் பொருளியல் ஈட்டுவது மட்டுமே. இன்னும் தங்களது கலாச்சாரப் பண்பாட்டு வரைமுறைகளைப் மேலைத்தேய நாடுகளிலும் பேணிப்பாதுப்பதென்னும் பெயரில் பெண் பிள்ளைகள் மீது மாத்திரம் அத்தனை அடக்குமுறைகளையும் நிறுவுவதுதான் நியதி. அடுத்து இத்தகைய புலம்பெயர்வாழ் மக்களுக்கு அங்கு வாழும் ஐரோப்பிய சமூகத்தின் கலாச்சாரமும் பண்பாடுகளும் அருவருப்பூட்டுபவை,அசிங்கமானவை. இத்தகையவர்களால் அங்கு வாழ்பவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் அங்கு கிடைக்கும் ஆடம்பர வாழ்க்கை, வசதி வாய்ப்புகள் அனைத்தும் இவர்களுக்கு தேவை.இன்னும் மதம்,கலாச்சாரம், பண்பாடு இவையெல்லாமே பெண்ணைச்சுற்றி மட்டுமே என்பதற்கிணங்க ஏற்ற தாழ்வுகள் வன்முறைகள் அனைத்தும் சொந்த வீட்டிலேயே நிகழும். ஒரு மனிதன் சுய பிரக்ஞையுடன் விரும்பி மேற்கொள்ளும் ஒரு விடயத்தை மதிப்பீடு (judgement) செய்வதும், குற்ற உணர்வை(guilty) மேலோங்கச்செய்து வேடிக்கை பார்ப்பதும் தான் நம் பழமைவாய்ந்த சமூகங்களின் உன்னதமான பண்பாடு.குறிப்பாக “சமூகம் என்ன சொல்லும்?” என்னும் கேள்விகள் மற்றும் புலம்பல்களுடனேயே நம் வாழ்வை நிதமும் கடத்தி தொலைத்து விடுகிறோம்.குடும்பம்,சமூகம் என்னும் கட்டமைப்பே மனிதனது ஆறுதலுக்கும் அரவணைப்புக்கும் தானே!ஆனால் இங்கே நிகழ்வது என்ன ? அன்பு, பாசம்,அரவணைப்பு என்னும் பெயரில் உணர்வுகளைக்கொட்டி அடக்குமுறை மேற்கொள்வது. Read More
Black Girl (1966)
மேற்காபிரிக்காவின் அதிகாரப்பூர்வமான குடியரசு நாடான senegalsஇல் பின்தங்கிய சூழலில் வசிக்கும் Diouanaஎன்னும் கறுப்பின இளம்பெண்ணின் புலம்பெயர்வின் கதை Black Girl(1966).[Original title “La Noir De”] செனகல்நாட்டு இயக்குனர் (Senegalese Director )Ousmane Sembene இன் முதல் முழு நீளத்திரைப்படமான Black Girl சர்வதேச அரங்கில் ஆபிரிக்க சமூகத்திற்கான ஒரு தனித்துவமான அடையாளத்தை அறுபதுகளிலேயே விட்டுச்சென்றது. இயக்குனர் Sembene திரைப்பட இயக்குனராக முன்னமே ஒரு நாவலாசிரியராக இருந்தவர்.நாவல் சிறந்த ஊடகமாக இருந்தும் கூட பெரும்பாலும் கல்வியறிவற்ற தன் ஆபிரிக்க சமூகப்பார்வையாளரை சென்றடைவதற்கு சிறந்த ஊடகம் சினிமாதான் என்றறிந்த தருணம் நாவலாசிரையரிலிருந்து தன்பார்வையை திரைப்படத்துறையின் பக்கம் திருப்பிக்கொண்டார்.1920 க்குப்பிறகு வட ஆபிரிக்காவில் பல திரைப்படங்கள் வந்த போதிலும் அவை பொதுவாக அரபு சினிமாவுடன் தொடர்புடையனவாகவே இருந்தன. இத்திரைப்படமானது துணை saharan-africa விலிருந்து வெளிவந்த முதல் நாடாக இருந்ததோடு இயக்குனரது சொந்த நாடான senegalsஇலேயே உருவாக்கப்பட்டது.அந்த காலகட்டத்தில் திரைப்பட உருவாக்கத்திற்கான வளங்கள்,கட்டமைப்புகள்,தொழிநுட்ப வசதிகள்,நிதி ஆதாரங்களோ எதுவுமே இல்லாதபோதும் கூட இயக்குனர் sembene உண்மையில் ஆபிரிக்க சினிமாவைப்பற்றிகொண்டதன் விளைவாக Black girl போன்றதொரு பிரதான திரைப்படம் ஆபிரிக்க சினிமாக்களுக்கு அடித்தளமாக என்றுமே நிலைத்திருக்குமாறு உருவாக்கி விட்டிருந்தார். Black Girl திரைப்படம் அவரது சொந்த எழுத்துக்களின் தழுவல்.1962 ஆம் ஆண்டில் அதே பெயரில் வெளியான நாவலை அடிப்படையாக கொண்டு திரைப்படத்தை உருவாக்கி இருந்தார்.அந்நாவலை எழுதுவதற்கான அசலான தூண்டுதலானது ,பிரஞ்சு செல்வந்த வீட்டில் வேலைபார்த்த ஆபிரிக்க வீட்டுப்பணிப்பெண் அவர்களது குளியல் தொட்டியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி பிரஞ்சுப்பத்திரிகையில்வந்திருந்த கட்டுரையில் இருந்து உருவானது.கிட்டத்தட்ட எந்தத்தகவலும் இல்லாத Read More
வாழ்க்கை கவிதைகளால் ஆனது.“paterson”(2016)
It is difficult to get the news from poems yet; men die miserably every day for lack of what is found there. – William carols Williams- கவிதைகள் யதார்த்தத்திகுப் புறம்பானவையாக, கற்பனையானவையாக இருக்கலாம். ஒன்றுகொன்று முரண்பட்டிருக்கும் அதேவேளை பொருத்தமான மொழிக்கோர்வைகளால் மட்டும் இணைந்திருக்கலாம். சரி ஒரு வித மொழி விளையாட்டாகவே இருக்கட்டுமே! கவிதை எதையும் செய்யப்போவதுமில்லை.எதையும் செய்யச் சொல்லுமாறு தூண்டுவதுமில்லை.அது அதன் பாட்டில் இருந்துவிடுகிறது.அதனை அதன் இருப்பிலேயே ரசித்து விட்டுப்போகிறோம்.அத்தகைய கவிதை வடிவிலான,ரசிப்பதற்கு மட்டுமே உரித்தான திரைப்படம்தான் “paterson”(2016) இயக்குநர் Jim Jarmusch தன் சுயகற்பனையைக்கொண்டு அவரது முழு உலகையும் மெல்லிய சந்தத்தோடு எளிமையான கையாண்டிருக்கிறார்.மனிதர்களது பொதுவாழ்க்கையில் கவிதை இல்லாமல் போனதற்கான காரணங்களில் ஒன்று பெரும்பான்மையான திரைப்படங்களில் அவை பற்றிய எவ்வித குறிப்புகள் வழங்காமல் விட்டதுமாகும் என்றதொரு குற்றச்சாட்டும் உண்டு.ஒரு திரைப்பட இயக்குநர் தன் திரைப்படத்தில் கவிதைகளை, அது சார்ந்த ரசனை மற்றும் நுணுக்கங்களைப் பயன்படுத்தும்போது கவிஞர்களும் கவிதையும் இலகுவாக பிரபல்யம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இன்னும் கவிதைக்கான தேவைப்படுகளும் மக்களின் ரசனையும் கூடலாம். ஆனால் நம் சமூகத்தில் இங்கே யார் யார் கவிஞர் என்று தேடிப்பார்க்கும் வரையில் அல்லது “நான் ஒரு கவிஞன்; என் கவிதைகள் வாசித்ததுண்டா?” என அவரே அவரது வாயால் கேட்கும் வரையில் யாருக்கும் யாரையும் தெரியாது. திரைப்படங்களில் கவிஞர்களை மெச்சியதும் மிக அரிது. இவற்றிற்கு புறம்பாக இத்திரைப்பட இயக்குநர் ஒரு படி மேலே போய் கவிதைகளாலும் கலைகளாலும் நிரப்பப்பட்ட ஒரு திரைப்படத்தை கவிதையாகவே Read More
நினைவுகள் யாவும் கண்ணீரின் தடையங்கள்
தனிமையைத் தானாக தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களாயினும் சரி அல்லது பிறரால் கைவிடப்பட்ட நிலையில் தனிமையில் உழன்று கொண்டிருப்பவர்களாயினும் சரி, ஒரு எல்லைக்குமேல் அதனை ஜீரணிக்க முடியாமல் நாம் தள்ளாடுகிறோம். அத்தகைய தனிமையை கலைகளாலும் ஏதோ முன்பின் அறிமுகமற்றவர்களின் சிலகண நேர அரவணைப்பினாலும் பூர்த்தியாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். காதல், தனிமை, வெறுமை, காதலைக்கடந்து செல்லல், இன்னொரு காதலுக்குள் வீழ்தல், உறவுச்சிக்கல், அகக்கொந்தளிப்புகள் போன்ற உணர்வுகள் ஒவ்வொருமனிதனும் தன் வாழ்வில் அனுபவித்துத் திளைத்திருக்க வேண்டியவை. இந்த உணர்வுகள் இவ்வுலகிற்குப் புதுமையான ஒன்றுமல்ல இன்னும் காதல் செய்வது மாபெரும் குற்றச்செயலுமல்ல. இத்தகைய மனித மனதின் அகச்சிக்கல்களையும் காதல் மற்றும் தனிமையை கடந்து செல்ல எடுக்கும் பிரயத்தனங்களையும் மக்களின் அன்றாட வாழ்வியலோடு ஒன்றித்து காட்சி மொழியின் மூலம் கவிதையாக வடிக்கும் வல்லமை பெற்றவர்தான் இயக்குநர் “Wongkar-wai”. அவரது ஒவ்வொரு திரைப்படத்தையும் தனிமையின் விளிம்பில் தவித்திருக்கும் போதே பார்த்திட வேண்டும். காதலில் வீழ்ந்து தொலைந்து போகும் யுக்திகளையும், காதலையும் தனிமையையும் கடந்து செல்லும் யுக்திகளையும் மிகவும் லாகவமாக காட்சிப்படுத்தியிருப்பார். இருந்தும் இவரது படங்களின் காட்சிகளையும் எளிதில் கடந்து செல்ல முடியாமல் அடிக்கடி நினைவு கூர்ந்து கொள்வோம். தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் இன்னொரு படத்தின் காட்சிகளின் வசனங்களின் தடையங்களை நாம் அடையாளம் காணக்கூடியவாறு அங்கங்கே விட்டுச்சென்றிருப்பார். அந்த வகையில் Happy together(1997), In the mood for Love (2000), Chunking express (1994), Fallen angels(1995), 2046 (2004), Days of being wild(1990), My blurbery nights(2007), As tears go by(1988) பிரதானமாகக் குறிப்பிடத்தக்கவை. என்ன எல்லாமே ஒரே வகையான உணர்வுத்தளம்தானே என்று எடுத்த Read More