“சைக்கோ” – ஓர் உளவியல்ப் போலி

‘சைக்கோ’ திரைப்படம் வெளியாகிய முதல் வாரத்தில் அதற்கு  நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட மிஷ்கினின் அதிக வசூல் திரைப்படமாகவும் இது உருமாற வாய்ப்புள்ளதோ என்று தோன்றுகிறது.இங்கு வெளிவந்து கொண்டிருக்கும் சினிமாக்களின் மத்தியில் ‘சைக்கோ’ கையாண்டிருக்கும் கதைக்களம் வேறெந்த தமிழ் திரைப்படத்துடனும் ஒப்பிட இயலாத ஒரு தனியிடத்தைக்  கோருகிறது. வெற்றிப் படங்களை உருவாக்குகிறேன் என்கின்ற பேர்வழியில் திரும்பத் திரும்ப வழமைக்கு மாற்றமில்லாத ஒரே மாதிரியான திரைப்படங்களை உருவாக்கும் மசாலா நடைமுறையிலிருந்து சைக்கோ எந்தளவிற்கு தூரம் சென்றுள்ளது என்பதில் சந்தேகம் உள்ளது. அதாவது, கதைக்கருவின் மையத்தின்பால் பார்வையாளர்கள்  கடுமையாக ஈர்க்கப்பட்டதனாலோ என்னவோ முக்கியத்துவமற்றதாகக் கருதப்படும் படத்தின் இதர பகுதிகளை படக்குழுவினர் மேம்போக்குத்தனத்துடன் கையாண்டிருப்பதனைப் படத்தைக் கொண்டாடும் பார்வையாளர்கள் உண்மையிலேயே கவனிக்கவில்லையா அல்லது அவர்கள் கண்டும் காணாதது போல பாவனை செய்கின்றனரா எனத் தெரியவில்லை. இத்தகைய வழக்கமான தமிழ் சினிமாப்பாங்கில் சற்றும் அடிபிரளா காட்சிகள்  முதல் பாதியில் ஏராளம். நாயகர் கவுதமுக்கும் தாகினிக்கும் இடையில் காதல் உருவாவதை காண்பிக்கும் காட்சிகள் முதற்கொண்டு,தாகினி கடத்தப்படும் இடம் வரை காட்சிப்படுத்தப்பட்டவைகள் யாவுமே மிஷ்கின் கோரும் மாற்று/ஆத்தேர் சினிமா ரகத்துக்கு எந்த அளவுகோல்களிலும் பொருந்தாதவை. தமிழ் சினிமாவில் காலங்காலமாக தூக்கிப்பிடிக்கப்படும் பெண்ணுடற் பண்டமாக்கலை முன்னிறுவித்தான் பார்வையாளர் மனங்களில் நாயகியின் அழகை இயக்குனர் பதிய வைக்கிறார். ஒரு நூலகத்திற்குள் ஸ்லீவ்லஸ் ஆடையை  அணிவித்து, இடுப்பை இங்குமங்குமாக ஆட்டி ஆட்டி அவரை நடக்கச் செய்து என இவற்றையெல்லாம் கண்டு ஆர்ப்பரித்த பார்வையாளர் கூட்டத்தை இறுதியில் Read More