இந்த வருடம் வெளியான தமிழ் திரைப்படங்களில் Game Over திரைப்படம் ஓரளவு கருத்தியல் ரீதியாக முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் வன்மத்தின் பின் இருக்கக்கூடிய “Sexual Trauma” விலிருந்து அந்த பெண்ணே மீண்டு வருவது போன்ற கருத்தியலும் காட்சியமைப்பும் தமிழ் சமூகத்தில் புதுமையான அணுகு முறையாக முன்னிறுவிப் பேசபட்டது. எனக்குத்தெரிந்து கருத்தியலை,கதாப்பாத்திரங்களை,நேர்த்தியாக கட்டமைக்காதவிடத்து எவ்வளவு தீவிரமான, உணர்வுப்பூர்வமான விடயத்தை பேச முற்பட்டாலும் அத்திரைப்படம் வெறும் சுவாரஷ்யத்தை கொண்டு பார்வையாளர்களின் சுரண்டலுக்கும்(Exploitation),நுகர்வுக்குமான திரைப்படமாகவே அணுகப்படும்.அதைத்தான் இயக்குனர் கதாப்பாத்திர வடிவமைப்பிலும் பெண்களை காட்சிப்படுத்தும் விதத்திலும் பிரதிபலிக்கச்செய்திருக்கிறார். திரைப்படத்தில் முதல் பாதி தேவையற்ற மிக மேம்போக்கான மற்றும் பார்வையாளர்களுக்கு உணர்வுகளைத்தூண்டும் என்ற நம்பிக்கையின் பேரில் போராட்ட குணமிக்க ஒரு பெண்ணை முன்னிறுவுவதாக சஞ்சனா என்னும் கதாப்பாத்திரம் காணப்பட்டது.இங்கு அந்தப்பெண் எதிர்கொள்ளும்“புற்றுநோய்” (cancer)என்னும் விடயம் ஆண்களைக்குறிக்கும் உவமையாக அல்லது குறியீடாக அவதானிக்க முடிந்திருந்தாலும்;அம்முன்கதை வெறும் உணர்ச்சிப்பிழம்புகளை தமிழ் சமூகத்தில் வழக்கமாக கட்டமைக்க முனைவது போல போலித்தன்மை நிறைந்ததாக கட்டமைத்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.இது போக ஒருவித அமானுஷ்ய தன்மையை சஞ்சனாவின் அஸ்தியினூடாக tatto வில் தப்சியின் உடலில் ஏற்றப்படுவதன் மூலம் சஞ்சனாவின் கேன்சருக்கு எதிராக போராடும் குணம் தப்சியிடம் உள்வாங்கப்பட்டு அவர் தனக்குள் நிகழும் trauma விற்கெதிராக போராடுவதாக காட்சிப்படுத்தப்படுவது யதார்த்தத்தை ஒரு விதமாக சீர் குலைத்து அமானுஷ்யத்தையே முன்னிறுவுவதாக தோன்றியது.ஆக அஸ்தி,ஆவி, அமானுஷ்யம் என்ற தோரணையில் தான் சமகாலப் பெண்ணின் இருப்பு மற்றும் உளவியல்,உடலியல் போராட்டங்கள் நம்முன் Read More
Tag: தமிழ் சினிமா
“சைக்கோ” – ஓர் உளவியல்ப் போலி
‘சைக்கோ’ திரைப்படம் வெளியாகிய முதல் வாரத்தில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட மிஷ்கினின் அதிக வசூல் திரைப்படமாகவும் இது உருமாற வாய்ப்புள்ளதோ என்று தோன்றுகிறது.இங்கு வெளிவந்து கொண்டிருக்கும் சினிமாக்களின் மத்தியில் ‘சைக்கோ’ கையாண்டிருக்கும் கதைக்களம் வேறெந்த தமிழ் திரைப்படத்துடனும் ஒப்பிட இயலாத ஒரு தனியிடத்தைக் கோருகிறது. வெற்றிப் படங்களை உருவாக்குகிறேன் என்கின்ற பேர்வழியில் திரும்பத் திரும்ப வழமைக்கு மாற்றமில்லாத ஒரே மாதிரியான திரைப்படங்களை உருவாக்கும் மசாலா நடைமுறையிலிருந்து சைக்கோ எந்தளவிற்கு தூரம் சென்றுள்ளது என்பதில் சந்தேகம் உள்ளது. அதாவது, கதைக்கருவின் மையத்தின்பால் பார்வையாளர்கள் கடுமையாக ஈர்க்கப்பட்டதனாலோ என்னவோ முக்கியத்துவமற்றதாகக் கருதப்படும் படத்தின் இதர பகுதிகளை படக்குழுவினர் மேம்போக்குத்தனத்துடன் கையாண்டிருப்பதனைப் படத்தைக் கொண்டாடும் பார்வையாளர்கள் உண்மையிலேயே கவனிக்கவில்லையா அல்லது அவர்கள் கண்டும் காணாதது போல பாவனை செய்கின்றனரா எனத் தெரியவில்லை. இத்தகைய வழக்கமான தமிழ் சினிமாப்பாங்கில் சற்றும் அடிபிரளா காட்சிகள் முதல் பாதியில் ஏராளம். நாயகர் கவுதமுக்கும் தாகினிக்கும் இடையில் காதல் உருவாவதை காண்பிக்கும் காட்சிகள் முதற்கொண்டு,தாகினி கடத்தப்படும் இடம் வரை காட்சிப்படுத்தப்பட்டவைகள் யாவுமே மிஷ்கின் கோரும் மாற்று/ஆத்தேர் சினிமா ரகத்துக்கு எந்த அளவுகோல்களிலும் பொருந்தாதவை. தமிழ் சினிமாவில் காலங்காலமாக தூக்கிப்பிடிக்கப்படும் பெண்ணுடற் பண்டமாக்கலை முன்னிறுவித்தான் பார்வையாளர் மனங்களில் நாயகியின் அழகை இயக்குனர் பதிய வைக்கிறார். ஒரு நூலகத்திற்குள் ஸ்லீவ்லஸ் ஆடையை அணிவித்து, இடுப்பை இங்குமங்குமாக ஆட்டி ஆட்டி அவரை நடக்கச் செய்து என இவற்றையெல்லாம் கண்டு ஆர்ப்பரித்த பார்வையாளர் கூட்டத்தை இறுதியில் Read More