நிறம் பார்க்கும் கேமராக்களின் அரசியல்.

சினிமா மனித இருத்தலின் ஒப்பற்ற ஆவணம். அதன் கலாச்சார தாக்கமானது சமூகங்களின் பார்வையை நிர்ணயிப்பது மட்டுமல்லாது அதன் தோற்றத்தை நிர்ணயிப்பதையும் கூட சாத்தியமாக்குகிறது. ஒரு நிலப்பரப்பின் கண்ணாடியாக சினிமா பார்க்கப்படும் பொழுது, அந்த கண்ணாடியில் நிலழாடும் பிம்பங்களே அந்தசமூகத்தின் தோற்றத்தினை வடிவமைக்கிறது.அமெரிக்க சினிமா உலகெங்கும் பெரும் காலாச்சார தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அமெரிக்க சினமாவின் முகங்கள் யாருடையது? அது ஒட்டு மொத்த சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறதா? என்ற கேள்வியை நாம் எழுப்புகயில், சினிமாவின் வரலாற்று நெடுகிலும் ஒடுக்கப்பட்ட கறுப்பினத்தவர் நிறுவனப்படுத்தப்பட்ட புறக்கணிப்புகளை சந்தித்தே வந்திருக்கின்றனர் என்பது விளங்கும். அந்த புறக்கணிப்பு மனநிலையில் இருந்து தோன்றிய அவர்களின் பிம்பங்கள் இயல்பிற்கு மாறாக உருக்குலைகப்பட்டு, அமெரிக்க சமூகத்தில் நிலவிய நிறவெறியின் நீட்சியாக எவ்வாறு விளங்கியது? குறிப்பாக புகைப்பட கருவிகளின் தொழில்நுட்பம் ஆபிரிக்க அமெரிக்க மக்களின் நிறத்தையும்  உருவத்தையும் பற்றிய எதிர்மறை கருத்துருவாக்கங்களுக்கு எவ்வாறு பயன்பட்டது? என்பதை இந்த கட்டுரை விவாதிக்கிறது. அந்த விவாதத்தினூடே இருந்து இந்திய சினிமாவில் அத்தகைய தொழில்நுட்பம் உருவாக்கிய சமூக ஊடரசியல் என்ன? அதன் தற்கால தாக்கம் இன்றைய சினிமாவின் தோற்றத்தையும் வடிவத்தையும் எவ்வாறு பாதிக்கிறது? என்ற பார்வையையும் இந்த கட்டுரை வழங்க முயற்சி செய்கிறது. எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நம்முடைய வீடுகளில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களை நாம் திருப்பிப்பார்த்தால் இயல்பை விட நமக்கு தெரிந்தவர்கள் அடர் கருப்பாக தோற்றமளிப்பதை கவனித்திருப்போம். ‘கண்ணும் பல்லும் மட்டும் பளிச்சுன்னு தெரியுது பாருன்னு’ கருப்பாக இருக்கும் Read More