Game Over (2019)ஒரு பார்வை

இந்த வருடம் வெளியான தமிழ் திரைப்படங்களில் Game Over திரைப்படம் ஓரளவு கருத்தியல் ரீதியாக முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் வன்மத்தின் பின்  இருக்கக்கூடிய “Sexual Trauma” விலிருந்து அந்த பெண்ணே மீண்டு வருவது போன்ற கருத்தியலும் காட்சியமைப்பும் தமிழ் சமூகத்தில் புதுமையான அணுகு முறையாக முன்னிறுவிப் பேசபட்டது. எனக்குத்தெரிந்து கருத்தியலை,கதாப்பாத்திரங்களை,நேர்த்தியாக கட்டமைக்காதவிடத்து எவ்வளவு தீவிரமான, உணர்வுப்பூர்வமான விடயத்தை பேச முற்பட்டாலும் அத்திரைப்படம் வெறும் சுவாரஷ்யத்தை கொண்டு பார்வையாளர்களின் சுரண்டலுக்கும்(Exploitation),நுகர்வுக்குமான திரைப்படமாகவே அணுகப்படும்.அதைத்தான் இயக்குனர் கதாப்பாத்திர வடிவமைப்பிலும் பெண்களை காட்சிப்படுத்தும் விதத்திலும் பிரதிபலிக்கச்செய்திருக்கிறார். திரைப்படத்தில் முதல் பாதி தேவையற்ற மிக மேம்போக்கான மற்றும்  பார்வையாளர்களுக்கு உணர்வுகளைத்தூண்டும் என்ற நம்பிக்கையின் பேரில்  போராட்ட குணமிக்க ஒரு பெண்ணை முன்னிறுவுவதாக சஞ்சனா என்னும் கதாப்பாத்திரம் காணப்பட்டது.இங்கு அந்தப்பெண் எதிர்கொள்ளும்“புற்றுநோய்” (cancer)என்னும் விடயம் ஆண்களைக்குறிக்கும் உவமையாக அல்லது குறியீடாக அவதானிக்க முடிந்திருந்தாலும்;அம்முன்கதை வெறும் உணர்ச்சிப்பிழம்புகளை தமிழ் சமூகத்தில் வழக்கமாக கட்டமைக்க முனைவது போல போலித்தன்மை நிறைந்ததாக கட்டமைத்திருப்பது  அப்பட்டமாகத் தெரிகிறது.இது போக ஒருவித அமானுஷ்ய தன்மையை சஞ்சனாவின் அஸ்தியினூடாக tatto வில்  தப்சியின் உடலில் ஏற்றப்படுவதன் மூலம் சஞ்சனாவின் கேன்சருக்கு எதிராக போராடும் குணம் தப்சியிடம் உள்வாங்கப்பட்டு அவர் தனக்குள் நிகழும் trauma விற்கெதிராக போராடுவதாக காட்சிப்படுத்தப்படுவது யதார்த்தத்தை ஒரு விதமாக சீர் குலைத்து அமானுஷ்யத்தையே முன்னிறுவுவதாக தோன்றியது.ஆக அஸ்தி,ஆவி, அமானுஷ்யம் என்ற தோரணையில் தான் சமகாலப் பெண்ணின் இருப்பு மற்றும் உளவியல்,உடலியல் போராட்டங்கள் நம்முன் Read More