சுயத்தின் அதிருதிப்திகள் (Girl 2018)

தன் பாலினம் குறித்து பதட்டம் கொள்ளச்செய்யவும்,பெரும்பான்மை சமூகம் அங்கீகரிக்கக்கூடிய உடலியல் கூறுகள், இன்னபிற  அலங்காரங்களைக்கொண்டு தன்னைக்குறித்த பாலினத்திற்குள் வகைப்படுத்தி அடைத்துக்கொள்வதற்கும் ஏதுவாகவே சமூகம் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றது. புறத்தோற்றம் மற்றும் பாலியல் உடற்கூறுகளைக் கொண்டுதான் ஒருவறது பாலினம் தீர்மானிக்கப்பட்டு சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரங்களும் இன்னபிற சலுகைகளும் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றதெனில், சமூகத்தில் பாலினம் பற்றிய இருப்பு குறித்து  சிந்திக்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இன்னும் தற்காலத்தில் தன் இயல்பான உடலை தானே வெறுக்கச்செய்ய, தன் உடலியல் கூறுகள் குறித்து மனதளவில் அதிருப்தியடையும் நிலையை உருவாக்கக்கூடியவாறே பாலின அரசியல் சமூகத்தில் இறுக்கமாக  நிறுவப்பட்டுள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது. ஒரு நபரின்  பாலின அடிப்படையைக் கொண்டு “இவர் இவ்வாறுதான் இருக்கவேண்டும் அல்லது வாழவேண்டும்” என்று குறிப்பிட்ட சமூகம் அல்லது குழு பல்வேறான அழுத்தங்களை கொடுக்குமிடத்து, அந்நபர் உளவியல்,உடலியல் ரீதியாக எந்தளவுக்கு சுய சந்தேகத்துடனும் சுய வெறுப்புடனும் வெறுமையாக தன்  தினசரி வாழ்க்கையைக் கடத்துவார் என்பது பெரும்பான்மையாக பேசாப் பெருந்துயர். Gir(2018) திரைப்படம் “பெண்ணாக” மாறத்துடிக்கும் இளம் மாற்றுப்பாலின பாலே நடனத்தில்(ballet dance) பேரார்வமிக்க Lara எனும் கதாப்பாத்திரத்தின் உளவியல், உடலியல்,பாலியல் சிக்கல்களை ஆராய முனைகிறது.Nora Monsecour எனும் தேர்ச்சிபெற்ற பாலே நடனகலைஞரின் உண்மைக்கதையின் மையத்தை மேம்போக்கான அடிப்படையில் உள்வாங்கி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.பருவவயதை எத்தனிக்க தயாராகவிருக்கும் லாரா ஒரு பெண்ணாக இருக்க விரும்பி பாலின மறுசீரமைப்பிற்கான சிகிச்சைகளை(gender reassingment surgery)மேற்கொண்டு வரும்போது அதில் முழுமையாக நம்பிக்கையும் பொறுமையுமற்றவராக காணப்படுகிறார்.தாராள வாத,தொழிநுட்பத்தில் Read More