Black Girl (1966)

மேற்காபிரிக்காவின் அதிகாரப்பூர்வமான குடியரசு நாடான senegalsஇல் பின்தங்கிய சூழலில் வசிக்கும் Diouanaஎன்னும் கறுப்பின இளம்பெண்ணின் புலம்பெயர்வின் கதை Black Girl(1966).[Original title “La Noir De”] செனகல்நாட்டு இயக்குனர்  (Senegalese Director )Ousmane Sembene இன் முதல் முழு நீளத்திரைப்படமான Black Girl சர்வதேச அரங்கில் ஆபிரிக்க சமூகத்திற்கான ஒரு தனித்துவமான அடையாளத்தை அறுபதுகளிலேயே விட்டுச்சென்றது. இயக்குனர் Sembene திரைப்பட இயக்குனராக முன்னமே ஒரு நாவலாசிரியராக இருந்தவர்.நாவல் சிறந்த ஊடகமாக இருந்தும் கூட  பெரும்பாலும் கல்வியறிவற்ற தன் ஆபிரிக்க சமூகப்பார்வையாளரை சென்றடைவதற்கு சிறந்த ஊடகம் சினிமாதான் என்றறிந்த தருணம்  நாவலாசிரையரிலிருந்து தன்பார்வையை திரைப்படத்துறையின் பக்கம் திருப்பிக்கொண்டார்.1920 க்குப்பிறகு வட ஆபிரிக்காவில் பல திரைப்படங்கள் வந்த போதிலும் அவை பொதுவாக அரபு சினிமாவுடன் தொடர்புடையனவாகவே இருந்தன. இத்திரைப்படமானது துணை  saharan-africa விலிருந்து வெளிவந்த  முதல் நாடாக இருந்ததோடு இயக்குனரது சொந்த நாடான senegalsஇலேயே உருவாக்கப்பட்டது.அந்த காலகட்டத்தில் திரைப்பட உருவாக்கத்திற்கான வளங்கள்,கட்டமைப்புகள்,தொழிநுட்ப வசதிகள்,நிதி ஆதாரங்களோ எதுவுமே இல்லாதபோதும் கூட இயக்குனர் sembene உண்மையில் ஆபிரிக்க சினிமாவைப்பற்றிகொண்டதன் விளைவாக Black girl போன்றதொரு பிரதான திரைப்படம் ஆபிரிக்க சினிமாக்களுக்கு அடித்தளமாக  என்றுமே நிலைத்திருக்குமாறு உருவாக்கி விட்டிருந்தார். Black Girl திரைப்படம் அவரது சொந்த எழுத்துக்களின் தழுவல்.1962 ஆம் ஆண்டில் அதே பெயரில் வெளியான நாவலை அடிப்படையாக கொண்டு திரைப்படத்தை உருவாக்கி இருந்தார்.அந்நாவலை எழுதுவதற்கான அசலான தூண்டுதலானது ,பிரஞ்சு செல்வந்த வீட்டில் வேலைபார்த்த ஆபிரிக்க வீட்டுப்பணிப்பெண் அவர்களது குளியல் தொட்டியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி பிரஞ்சுப்பத்திரிகையில்வந்திருந்த கட்டுரையில் இருந்து உருவானது.கிட்டத்தட்ட எந்தத்தகவலும் இல்லாத Read More