குறியீட்டுவாதத்தின் எதிரி

1984ம் ஆண்டு இலண்டனில் ஐரேனா ப்ரெஸ்னா என்ற பெண்ணுக்கு இயக்குனர் ஆந்த்ரே தார்கோவ்ஸ்கி வழங்கிய நேர்காணல். நேர்காணல் அறிமுகம்:புல்புல் இஸபெல்லா,ப்ரதீப் பாலு நேர்காணல் தமிழில் மொழி பெயர்ப்பு:ப்ரதீப் பாலு நேர்காணல் குறித்து ஒரு பார்வை/அறிமுகம் இன்றைய உலகின் தலைச்சிறந்த இயக்குனர்களுள் ஒருவராகக் கருதப்படுபவரான ஆந்த்ரே தார்கோவ்ஸ்க்கி, மனித வாழ்வியலின் பல்வேறு ஆழங்களிலும், சில மானுட உண்மைகளுக்குள்ளும் தனது பிரத்யேகத் திரைமொழியைக் கொண்டு இலாவகமாக பயணித்து அவற்றைத் திரையில் காண்பித்தவர். பிரபல ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸ் (Roger Deakins) உட்பட உலகில் தற்பொழுது வாழ்ந்து வரும் பல முன்னணி ஒளிப்பதிவாளர்களும் தார்கோவ்ஸ்க்கியுடன் ஒரு திரைப்படத்திலாவது பணி புரிய வாய்ப்பு கிட்டியிருக்க வேண்டுமென தங்கள் ஆர்வங்களை பல நேர்காணல்களில் வெளிப்படுத்தியுள்ளனர். இத்தகைய நேர்த்தியான மற்றும் தனித்துவமான திரை மொழிகளினூடே திரைப்படங்களை உருவாக்கி பார்வையாளர்களை அதிர்ச்சியூட்டிய தார்கோவ்ஸ்க்கி, திரைப்படங்களில் வெளிக்கொணர்வது போன்றே தனது தனி வாழ்கையிலும் வீரியமிக்க ஆன்மீகப் பார்வைகளை கொண்டிருப்பவர்.கிறித்துவ மத நாகரிக வளர்ச்சியில் ரஷ்ய நிலப்பரப்பு வகித்த இடத்தைப் போலவே, தார்கோவ்ஸ்க்கியும் மேற்குக் கலாச்சாரத்திற்கும் கீழைத்தேய கலாச்சாரத்துக்கும் இடையிலொரு நடுப்புள்ளியாகவே திகழ்கிறார். அதையொத்த புராதன மானுடத் தத்துவவியல்களின் பிரதிநிதியாக அவர் தன்னை நிறுவிக் கொள்கிறார். இதற்குக் காரணமில்லாமல் இல்லை. ரஷ்ய கம்யூனிச புரட்சிக்குப் பிறகு நிகழ்ந்த பொதுமக்களின் தொழில்துறை உயர்வுகள், அவர்களது ஆன்மீக உயர்வுகளுக்கு வித்திடவில்லை. ரஷ்ய நாட்டில் தூக்கியெறியப்பட்ட முதலாளித்துவ மற்றும் பூர்ஷுவா வர்க்க அறங்களை, கிறித்துவ மதம், ரஷ்ய மக்களின் மனங்களில் Read More

ஏகாதிபத்திய அரசுகளின் ஒற்றுமை (Der Baader Meinhof Komplex -2008)

தற்சமயம் இந்தியாவில் நிகழ்ந்துவரும் அரச வன்முறை உலக அரசியல் நடைமுறைக்கும் மானுட வரலாற்றுக்கும் புதியதல்ல. அதிலும் சிஏஏ/என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களின் பின்புலத்தில் இங்கிருக்கும் முன்னணி கல்வி நிறுவனங்களில் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்கள் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவைக் கொண்டு சேர்க்கும் இடம் குறித்த எந்த விதக் கவலையும் இந்திய அரசுக்கிருப்பதாகத் தெரியவில்லை.வேறெப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்திய வலதுசாரி மற்றும் இந்துத்துவக் கருத்தியலை பின்பற்றுபவர்கள் இந்திய நாட்டை ஒரு  ஏகாதிபத்திய (Imperialist) அரசாகப் புனையத் துவங்கியுள்ளனர். மண்ணின் வரலாற்றை மிகைப் பிரகடனம் செய்தல், மன்மோகன் சிங் காலத்தில் பொதுமக்கள் மத்தியில் அதிகப் புழக்கத்துக்குள்ளாகியிருந்த ‘ஜிடீபி’ என்ற சொல், உலகில் அச்சமயம் இந்தியா வெளிப்படுத்தியிருந்த மிதமிஞ்சிய பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறி மற்றும் அண்டை நாட்டு உறவுகளை குழந்தைமை ததும்பும் முதிர்ச்சயின்மையுடன் அணுகுதல், என ஒட்டுமொத்த உலகில் ‘தம் இருப்பே மகத்தானது’ என்று மார்தட்டிக் கொள்ளும் ஏகாதிபத்திய மனோபாவத்துடன் தான் இந்தியா தற்பொழுது உலகின் கண்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. தேசப்பற்று எனும் பூடகச் சொல்லுக்கு சுயநியாயம்  கற்பித்தவாறே தனது முரட்டுத் தனத்தை அதுவரை அண்டை நாடுகளின் மீது வெளிப்படுத்தி வந்த இந்தியா, அவ்வாறு நடந்து கொள்ள அந்நாடுகளும் தற்பொழுது போதிய பின்புலங்களை வழங்காமல் இருப்பதன் விளைவாக, இப்பொழுது அதே வன்மத்தையும் ஏகாதிபத்தியத்தையும் உள்நாட்டவர்கள் மீது செலுத்த இவ்வரசு துளியும் தயங்காமல் இருப்பதை நம்மால் கிரகிக்க இயலும். சென்ற வருடம்  ஜாமியா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வன்முறை மற்றும்  Read More