book introduction

“ஸலாம் அலைக்” அடையாளம் தேடும் அகதி

இலக்கியச்சூழலில் ஈழப்போர் குறித்த காத்திரமான விமர்சப்பார்வை கொண்டவை ஷோபாவின் எழுத்துக்கள். தமிழ் ஈழப்போர் பற்றி, தமிழ் மொழிப் பற்றுடன் வெளியில் நின்று ரொமான்டிசைஸ் செய்து துதி மட்டும் பாடிக்கொண்டிருப்பவர்களுக்கிடையில், போரில் சிக்குண்டு அலைக்கழியும் சாமானியனின் இருண்ட அவமானங்கள் நிறைந்த பக்கங்களை, நீண்ட விடைகாண முடியாத பயணங்களை பேசுபொருளாகக் கொண்டுவருகிறார். போரின் போதிருந்த சூழலும் போரின் பிந்திய சூழலும் விவரிக்கப்பட்டு பாஸ்போர்ட்,விசா  இல்லாமல், அலைக்கழிந்து திரியும் ஒரு சாமானியனின் பார்வையிலிருந்து அவனைச்சுற்றி நிகழும் வன்முறைகளை,  குற்றவுணர்வுகளை ஆவணப்படுத்தும் நினைவுக்குறிப்பாக இந்நாவலை அடையாளம் காணமுடிந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு- கொழும்பிலிருந்து தாய்லாந்து- தாய்லாந்திலிருந்து பிரான்ஸ்- பிரான்சிலிருந்து… எங்கே ? போரின் பின்னரும்  நிரந்தரமாக ஓரிடத்தில் இளைப்பாறக் கூட முடியாமல் அரசின் சட்ட நெருக்கடிகளால் அவதிப்பட்டு மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டே இருக்கிறான் அந்த சாமானியன். நவ தாராளவாதத்தை உள்வாங்கிக்கொண்ட நாடுகள் தங்களை உலக சமாதானத்தின் முன்னோடிகளாக, சுதந்திரத்தின் முன்னோடிகளாக, பொருளாதார  சமநிலையை நிகழ்த்தியவர்களாக, இன்னும்  கலாச்சாரத்தில் உயர்ந்த அந்தஸ்த்தைக் கைக்கொண்ட மனிதாபிமானிகளாக தங்களை முன்னிறுவிக்கொண்டு வலம் வருவதன் அசல்  முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது “ஸலாம் அலைக்” நாவல். பல்லினக் கலாச்சாரப் பின்புலத்தை கொண்ட மக்கள் ஒன்றாகவும் சுமுகமாகவும்  சுதந்திரமாக வாழ முடியும் என்கிற தாராளவாத நாடுகளின் சிந்தனையின் தோல்வியைத்தான் ஐரோப்பிய இலக்கியங்களும் சினிமாக்களும் வெகுவாக விமர்சித்து வருகின்றன. (உதாரணமாக Rainer Werner Fassbinder- Ali fear eats soul, Michael Haneke – code unknown, Fatih Read More

“சைக்கோ” – ஓர் உளவியல்ப் போலி

‘சைக்கோ’ திரைப்படம் வெளியாகிய முதல் வாரத்தில் அதற்கு  நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட மிஷ்கினின் அதிக வசூல் திரைப்படமாகவும் இது உருமாற வாய்ப்புள்ளதோ என்று தோன்றுகிறது.இங்கு வெளிவந்து கொண்டிருக்கும் சினிமாக்களின் மத்தியில் ‘சைக்கோ’ கையாண்டிருக்கும் கதைக்களம் வேறெந்த தமிழ் திரைப்படத்துடனும் ஒப்பிட இயலாத ஒரு தனியிடத்தைக்  கோருகிறது. வெற்றிப் படங்களை உருவாக்குகிறேன் என்கின்ற பேர்வழியில் திரும்பத் திரும்ப வழமைக்கு மாற்றமில்லாத ஒரே மாதிரியான திரைப்படங்களை உருவாக்கும் மசாலா நடைமுறையிலிருந்து சைக்கோ எந்தளவிற்கு தூரம் சென்றுள்ளது என்பதில் சந்தேகம் உள்ளது. அதாவது, கதைக்கருவின் மையத்தின்பால் பார்வையாளர்கள்  கடுமையாக ஈர்க்கப்பட்டதனாலோ என்னவோ முக்கியத்துவமற்றதாகக் கருதப்படும் படத்தின் இதர பகுதிகளை படக்குழுவினர் மேம்போக்குத்தனத்துடன் கையாண்டிருப்பதனைப் படத்தைக் கொண்டாடும் பார்வையாளர்கள் உண்மையிலேயே கவனிக்கவில்லையா அல்லது அவர்கள் கண்டும் காணாதது போல பாவனை செய்கின்றனரா எனத் தெரியவில்லை. இத்தகைய வழக்கமான தமிழ் சினிமாப்பாங்கில் சற்றும் அடிபிரளா காட்சிகள்  முதல் பாதியில் ஏராளம். நாயகர் கவுதமுக்கும் தாகினிக்கும் இடையில் காதல் உருவாவதை காண்பிக்கும் காட்சிகள் முதற்கொண்டு,தாகினி கடத்தப்படும் இடம் வரை காட்சிப்படுத்தப்பட்டவைகள் யாவுமே மிஷ்கின் கோரும் மாற்று/ஆத்தேர் சினிமா ரகத்துக்கு எந்த அளவுகோல்களிலும் பொருந்தாதவை. தமிழ் சினிமாவில் காலங்காலமாக தூக்கிப்பிடிக்கப்படும் பெண்ணுடற் பண்டமாக்கலை முன்னிறுவித்தான் பார்வையாளர் மனங்களில் நாயகியின் அழகை இயக்குனர் பதிய வைக்கிறார். ஒரு நூலகத்திற்குள் ஸ்லீவ்லஸ் ஆடையை  அணிவித்து, இடுப்பை இங்குமங்குமாக ஆட்டி ஆட்டி அவரை நடக்கச் செய்து என இவற்றையெல்லாம் கண்டு ஆர்ப்பரித்த பார்வையாளர் கூட்டத்தை இறுதியில் Read More

what will people say (2017)

“கலாச்சார மோதல்களும் முரண்களும் என்றைக்கும் முடிவற்றது”. கீழைத்தேய நாடுகளிலிருந்து பொருளாதார மட்டத்தில் செழிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளை மாத்திரம் நோக்காக கொண்டு புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெற்றோர் மற்றும் அவர்களின் சந்ததியினர் எதிர் நோக்கும் மிகப்பெரும் சவால்களில் ஒன்று கலாச்சார முரண்களும் அவை சார்ந்த அடக்குமுறைகளும். ஐரோப்பா செல்லும் பெரும்பாலரின் நோக்கம் பொருளியல் ஈட்டுவது மட்டுமே. இன்னும் தங்களது கலாச்சாரப் பண்பாட்டு வரைமுறைகளைப் மேலைத்தேய நாடுகளிலும் பேணிப்பாதுப்பதென்னும் பெயரில் பெண் பிள்ளைகள் மீது மாத்திரம் அத்தனை அடக்குமுறைகளையும் நிறுவுவதுதான் நியதி. அடுத்து இத்தகைய புலம்பெயர்வாழ் மக்களுக்கு அங்கு வாழும் ஐரோப்பிய சமூகத்தின் கலாச்சாரமும் பண்பாடுகளும் அருவருப்பூட்டுபவை,அசிங்கமானவை. இத்தகையவர்களால் அங்கு வாழ்பவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் அங்கு கிடைக்கும் ஆடம்பர வாழ்க்கை, வசதி வாய்ப்புகள் அனைத்தும் இவர்களுக்கு தேவை.இன்னும் மதம்,கலாச்சாரம், பண்பாடு இவையெல்லாமே பெண்ணைச்சுற்றி மட்டுமே என்பதற்கிணங்க ஏற்ற தாழ்வுகள் வன்முறைகள் அனைத்தும் சொந்த வீட்டிலேயே நிகழும். ஒரு மனிதன் சுய பிரக்ஞையுடன் விரும்பி மேற்கொள்ளும் ஒரு விடயத்தை மதிப்பீடு (judgement) செய்வதும், குற்ற உணர்வை(guilty) மேலோங்கச்செய்து வேடிக்கை பார்ப்பதும் தான் நம் பழமைவாய்ந்த சமூகங்களின் உன்னதமான பண்பாடு.குறிப்பாக “சமூகம் என்ன சொல்லும்?” என்னும் கேள்விகள் மற்றும் புலம்பல்களுடனேயே நம் வாழ்வை நிதமும் கடத்தி தொலைத்து விடுகிறோம்.குடும்பம்,சமூகம் என்னும் கட்டமைப்பே மனிதனது ஆறுதலுக்கும் அரவணைப்புக்கும் தானே!ஆனால் இங்கே நிகழ்வது என்ன ? அன்பு, பாசம்,அரவணைப்பு என்னும் பெயரில் உணர்வுகளைக்கொட்டி அடக்குமுறை மேற்கொள்வது. Read More