நாம் நம் சொந்த நினைவுகளின் சிறைவாசிகள். குறிப்பாக சிறுபராயக் காயங்களும் (childhood trauma), முடிவுக்கு கொண்டு வரப்படாத உறவுகளின் கைவிடப்படல்களும், மெளனமாக நமக்குள் நிகழும் போர்களும் உருவாக்கியவை. சந்தோஷமான நினைவுகளை விட வலிகளால்/எதிர்மறையான நினைவுகளினால் நாம் அதிகமாக ஈர்க்கப் படுகிறோம். நத்தை தனது கூட்டினைச் சுமப்பது போல, நம் கடந்தகால நினைவுகளின் ஏக்கச் சுமைகளைக் கைவிடாமல் நம்முடனே இழுத்துச் செல்கிறோம்; அந்தச் சுமை நம் முன்னோக்கிய ஒவ்வொரு நகர்வையும் மெதுவாக்குகிறது, நம்மைவிட்டு விலக்கி வைக்க முடியாத சுமையாக நம்முடனேயே பயணிக்கிறது. நினைவுகள் என்னும் அந்த நத்தைக் கூடுதான் நமக்கு ஒரே நேரத்தில் தஞ்சமும், சிறையும். அந்தக் கூட்டினுள்ளே, அடர்ந்திருக்கும் இருளானது “வெறுமை” அல்ல; மாறாக விசித்திரமான இன்னும் நமக்கு மிகவும் பழக்கப்பட்ட, நெருக்கமான “அரவணைப்பு”. இன்னும் சொல்லப்போனால், தனிப்பட்ட சொந்த விரக்தியின், சுய பச்சாதாப அரவணைப்பு. நம்மை இன்னும் தீவிரமாக புரிந்துகொண்டு நம்முடன் ஆழமாக இணையும் ஒரே வழி. காலங்கடந்து தற்போது இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் கடந்தகால நினைவுகள், தற்போதைய இருப்பைவிட, நிகழ்காலத்தை விட உயிர்ப்புடன் தோன்றும் அளவுக்கு மீண்டும் மீண்டும் மனதில் மீட்டிப் பார்க்கப்பட்டு, சுய பிரக்ஞையின்றி (சில நேரம் பிரக்ஞையுடன்) விளையாடப்படுகின்றன. பல சமயங்களில் இந்த நினைவுகளை நம் அறிவுக்கு அப்பாற்பட்டு கற்பனை செய்து உயிர்ப்புடன் வைத்திருக்க முயற்சிக்கிறோம். ஒரு யாசகன் தனது நாணயங்களை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்துக் கொள்வது போல, அந்த நாணயங்களின் எடையே நம் இருப்பை நிரூபிப்பது Read More
Tag: Bulbulisabella
STOP RAPING US
Cannes திரைப்பட விழா நிகழ்வில் சிவப்புக் கம்பள வரவேற்பில் பெண்ணியச் செயற்பாட்டாளர் தன் நிர்வாண உடலில் உக்ரைன் கொடிநிறத்தின் மீது “Stop Raping Us” என வரைந்து வன்புணர்வுக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் முகமாக ஆக்ரோஷமாக அலறிய சம்பவம் அனைவரையும் நிலை குலையச்செய்தது. அங்கு அவர் கோருவது தார்மீகமாய் அவர் மீதான கவனக்குவிப்பு. ஊடகங்கள் மத்தியில் அவர் வெளிப்படுத்த நினைத்ததை நிகழ்த்திட (பேசிட)ஒரு வாய்ப்பு. இத்தனைக்கும் Cannes திரைப்பட ஆரம்ப நிகழ்வு உக்ரைன் அதிபரின் உரையுடன்தான் ஆர்பித்தது. (“It’s necessary for cinema not to be silent.”-Volodymyr Zelensky) உலகின் தலை சிறந்த படங்களை தேர்வு செய்தும் அவற்றை அங்கீகரிப்பவர்களாகவும் கலையின் முன்னோடியாக முன்னிறுவிக்கொள்ளும் Cannes திரைப்பட விழா ஒரு பெண்ணின் நிர்வாணத்தையும் ஆக்ரோஷத்தையும் கண்டு பயம் கொள்கிறது. உடனே அங்குள்ள காவலாளிகளும் சுற்றியுள்ளவர்களும் அருவருப்பாக அப்பெண்ணைப் பார்த்து பதறியடித்துக்கொண்டு அவரது உடலை மூடி அவ்விடத்தைவிட்டே அப்புறப்படுத்த முயற்சிக்கிறார்கள். கலை, சினிமாத்துறை, ஃபேஷன் மாடலிங் துறை பெண்ணுடல் குறித்து எத்தகைய புரிதல்களை இந்த நாகரீக முதலாளித்துவ முட்டாள்களுக்குள் தற்காலத்தில் ஏற்படுத்தியுள்ளது என்று சிந்திக்கையில் வியப்பாக உள்ளது. முதலாளித்துவம் கோரும் உடலுக்கு எதிரான உடல் இல்லையா பெண்ணின் அப்பட்டமான நிர்வாண உடல்?சங்கடமாகத்தான் இருக்கும். உடலின் சுய வெளிப்பாட்டிற்கு, எதிரானவர்கள் இல்லையா இந்த பூர்ஷுவாக்கள்? அவர்கள் நிர்ணயிக்கும் உடையுடன், உடல்வாகுடன், கவர்ச்சித் தோற்றத்துடன் சிவப்புக் கம்பளத்தில் Arrogant ஆக நடை பயில வேண்டும். மனிதனின் Vulnerabilityக்கோ ஒடுக்குமுறைக்கெதிரான (Aggressive voice) ஆக்ரோஷமான Read More
what will people say (2017)
“கலாச்சார மோதல்களும் முரண்களும் என்றைக்கும் முடிவற்றது”. கீழைத்தேய நாடுகளிலிருந்து பொருளாதார மட்டத்தில் செழிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளை மாத்திரம் நோக்காக கொண்டு புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெற்றோர் மற்றும் அவர்களின் சந்ததியினர் எதிர் நோக்கும் மிகப்பெரும் சவால்களில் ஒன்று கலாச்சார முரண்களும் அவை சார்ந்த அடக்குமுறைகளும். ஐரோப்பா செல்லும் பெரும்பாலரின் நோக்கம் பொருளியல் ஈட்டுவது மட்டுமே. இன்னும் தங்களது கலாச்சாரப் பண்பாட்டு வரைமுறைகளைப் மேலைத்தேய நாடுகளிலும் பேணிப்பாதுப்பதென்னும் பெயரில் பெண் பிள்ளைகள் மீது மாத்திரம் அத்தனை அடக்குமுறைகளையும் நிறுவுவதுதான் நியதி. அடுத்து இத்தகைய புலம்பெயர்வாழ் மக்களுக்கு அங்கு வாழும் ஐரோப்பிய சமூகத்தின் கலாச்சாரமும் பண்பாடுகளும் அருவருப்பூட்டுபவை,அசிங்கமானவை. இத்தகையவர்களால் அங்கு வாழ்பவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் அங்கு கிடைக்கும் ஆடம்பர வாழ்க்கை, வசதி வாய்ப்புகள் அனைத்தும் இவர்களுக்கு தேவை.இன்னும் மதம்,கலாச்சாரம், பண்பாடு இவையெல்லாமே பெண்ணைச்சுற்றி மட்டுமே என்பதற்கிணங்க ஏற்ற தாழ்வுகள் வன்முறைகள் அனைத்தும் சொந்த வீட்டிலேயே நிகழும். ஒரு மனிதன் சுய பிரக்ஞையுடன் விரும்பி மேற்கொள்ளும் ஒரு விடயத்தை மதிப்பீடு (judgement) செய்வதும், குற்ற உணர்வை(guilty) மேலோங்கச்செய்து வேடிக்கை பார்ப்பதும் தான் நம் பழமைவாய்ந்த சமூகங்களின் உன்னதமான பண்பாடு.குறிப்பாக “சமூகம் என்ன சொல்லும்?” என்னும் கேள்விகள் மற்றும் புலம்பல்களுடனேயே நம் வாழ்வை நிதமும் கடத்தி தொலைத்து விடுகிறோம்.குடும்பம்,சமூகம் என்னும் கட்டமைப்பே மனிதனது ஆறுதலுக்கும் அரவணைப்புக்கும் தானே!ஆனால் இங்கே நிகழ்வது என்ன ? அன்பு, பாசம்,அரவணைப்பு என்னும் பெயரில் உணர்வுகளைக்கொட்டி அடக்குமுறை மேற்கொள்வது. Read More