இலக்கியச்சூழலில் ஈழப்போர் குறித்த காத்திரமான விமர்சப்பார்வை கொண்டவை ஷோபாவின் எழுத்துக்கள். தமிழ் ஈழப்போர் பற்றி, தமிழ் மொழிப் பற்றுடன் வெளியில் நின்று ரொமான்டிசைஸ் செய்து துதி மட்டும் பாடிக்கொண்டிருப்பவர்களுக்கிடையில், போரில் சிக்குண்டு அலைக்கழியும் சாமானியனின் இருண்ட அவமானங்கள் நிறைந்த பக்கங்களை, நீண்ட விடைகாண முடியாத பயணங்களை பேசுபொருளாகக் கொண்டுவருகிறார். போரின் போதிருந்த சூழலும் போரின் பிந்திய சூழலும் விவரிக்கப்பட்டு பாஸ்போர்ட்,விசா இல்லாமல், அலைக்கழிந்து திரியும் ஒரு சாமானியனின் பார்வையிலிருந்து அவனைச்சுற்றி நிகழும் வன்முறைகளை, குற்றவுணர்வுகளை ஆவணப்படுத்தும் நினைவுக்குறிப்பாக இந்நாவலை அடையாளம் காணமுடிந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு- கொழும்பிலிருந்து தாய்லாந்து- தாய்லாந்திலிருந்து பிரான்ஸ்- பிரான்சிலிருந்து… எங்கே ? போரின் பின்னரும் நிரந்தரமாக ஓரிடத்தில் இளைப்பாறக் கூட முடியாமல் அரசின் சட்ட நெருக்கடிகளால் அவதிப்பட்டு மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டே இருக்கிறான் அந்த சாமானியன். நவ தாராளவாதத்தை உள்வாங்கிக்கொண்ட நாடுகள் தங்களை உலக சமாதானத்தின் முன்னோடிகளாக, சுதந்திரத்தின் முன்னோடிகளாக, பொருளாதார சமநிலையை நிகழ்த்தியவர்களாக, இன்னும் கலாச்சாரத்தில் உயர்ந்த அந்தஸ்த்தைக் கைக்கொண்ட மனிதாபிமானிகளாக தங்களை முன்னிறுவிக்கொண்டு வலம் வருவதன் அசல் முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது “ஸலாம் அலைக்” நாவல். பல்லினக் கலாச்சாரப் பின்புலத்தை கொண்ட மக்கள் ஒன்றாகவும் சுமுகமாகவும் சுதந்திரமாக வாழ முடியும் என்கிற தாராளவாத நாடுகளின் சிந்தனையின் தோல்வியைத்தான் ஐரோப்பிய இலக்கியங்களும் சினிமாக்களும் வெகுவாக விமர்சித்து வருகின்றன. (உதாரணமாக Rainer Werner Fassbinder- Ali fear eats soul, Michael Haneke – code unknown, Fatih Read More