“மாடத்தி (2019)” தமிழ் சினிமாச்சூழலுடன் ஓர் ஒப்பீட்டுப்பார்வை

கவிஞரும் சுயாதீனத் திரைப்பட இயக்குனருமான  லீனா மணிமேகலையின் மாடத்தி(Maadathy)திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்பு பார்க்கும் வாய்ப்புகிட்டியது.இயக்குனரின் தெளிவான பார்வையும் முதிர்ச்சி நிலையும் தமிழ் சமூகத்திற்கு புதுமையானதும் அத்தியாவசியமானதும் கூட. உண்மையில் சாதியம்,தீண்டாமை பற்றி பேச முனைபவர்கள் பெண்ணிலிருந்து ஆரம்பிப்பதே அறம் என்பது என் நிலைப்பாடு.ஒரு பெண் எந்த வர்க்கத்தில் ஜாதியில் பிறந்தாலும் அவள்  இடம் சூத்திரருக்கும் கீழ்தான்.ஒடுக்கப்பட்டவர்கள் அல்லது ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மற்றொரு தனியரை பாலின அடிப்படையில் ஒடுக்கும் எல்லைக்கு போவது குறித்து பிரக்ஞைப்பூர்வமாக இருக்க, ஒடுக்குதலின் கீழ்மையயையும் அதன் அரசியலையும் சரியாகப் புரிந்துகொள்ளப்படவேண்டிய தேவை இந்தியச் சூழலில் நிலவுகிறது.இங்கு சாதிய ஒடுக்குமுறையிலிருந்து மேலே வர எத்தனிப்பவர்கள்,தாங்கள் “ஆண்” என்கிற பிம்பத்தைக் கட்டமைத்து,நிறுவி அதன்மேல் ஏறி நின்று அரசியல் பேசி,தன் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முனைக்கிறார்களே ,ஒழிய யாரும் பாலின உடைப்பை நிகழ்த்தி,ஆணாதிக்கத்தை களைந்து விட்டு  அரசியல் பேச முன்வருவதில்லை.இங்குதான் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கென குரல்கொடுக்கும் இடத்தில் பெண்ணிற்கான இடம் புறந்தள்ளி விடப்பட்டு,அது தனியாக இங்குள்ள ஆண்மையச் சிந்தனைவாதம் கொண்டவர்கள் சொல்வது போல் பெண்ணியம் என்ற ஆடம்பர வார்த்தைக்குள் சிக்குண்டு “பெண்ணியம் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல், பெண்ணியம் வன்புணர்விற்கு எதிரான குரல்,” என்னும் கருத்தியல் மழுங்கடிக்கப்பட்டு விடுகின்றன.இவை சரியாகப் புரிந்து கொள்ளப்படாத பட்சத்தில் மாறி மாறி அதிகாரத்தை உள்வாங்கி வன்முறைகளாகவே சமூகத்தில் பரிணமித்துவிட வழி கோலப்படுகின்றன.இன்னும் ஜாதி, மதம்,இனம்,மொழி,ஆடைக் கலாச்சாரம் போன்ற இன்ன பிறபெயர்களைக் கொண்டு  பெண்களை வன்புணர்ந்து விட்டு (patriarchy) “ஆணாதிக்கம்” என்னும் Read More