குறியீட்டுவாதத்தின் எதிரி

1984ம் ஆண்டு இலண்டனில் ஐரேனா ப்ரெஸ்னா என்ற பெண்ணுக்கு இயக்குனர் ஆந்த்ரே தார்கோவ்ஸ்கி வழங்கிய நேர்காணல். நேர்காணல் அறிமுகம்:புல்புல் இஸபெல்லா,ப்ரதீப் பாலு நேர்காணல் தமிழில் மொழி பெயர்ப்பு:ப்ரதீப் பாலு நேர்காணல் குறித்து ஒரு பார்வை/அறிமுகம் இன்றைய உலகின் தலைச்சிறந்த இயக்குனர்களுள் ஒருவராகக் கருதப்படுபவரான ஆந்த்ரே தார்கோவ்ஸ்க்கி, மனித வாழ்வியலின் பல்வேறு ஆழங்களிலும், சில மானுட உண்மைகளுக்குள்ளும் தனது பிரத்யேகத் திரைமொழியைக் கொண்டு இலாவகமாக பயணித்து அவற்றைத் திரையில் காண்பித்தவர். பிரபல ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸ் (Roger Deakins) உட்பட உலகில் தற்பொழுது வாழ்ந்து வரும் பல முன்னணி ஒளிப்பதிவாளர்களும் தார்கோவ்ஸ்க்கியுடன் ஒரு திரைப்படத்திலாவது பணி புரிய வாய்ப்பு கிட்டியிருக்க வேண்டுமென தங்கள் ஆர்வங்களை பல நேர்காணல்களில் வெளிப்படுத்தியுள்ளனர். இத்தகைய நேர்த்தியான மற்றும் தனித்துவமான திரை மொழிகளினூடே திரைப்படங்களை உருவாக்கி பார்வையாளர்களை அதிர்ச்சியூட்டிய தார்கோவ்ஸ்க்கி, திரைப்படங்களில் வெளிக்கொணர்வது போன்றே தனது தனி வாழ்கையிலும் வீரியமிக்க ஆன்மீகப் பார்வைகளை கொண்டிருப்பவர்.கிறித்துவ மத நாகரிக வளர்ச்சியில் ரஷ்ய நிலப்பரப்பு வகித்த இடத்தைப் போலவே, தார்கோவ்ஸ்க்கியும் மேற்குக் கலாச்சாரத்திற்கும் கீழைத்தேய கலாச்சாரத்துக்கும் இடையிலொரு நடுப்புள்ளியாகவே திகழ்கிறார். அதையொத்த புராதன மானுடத் தத்துவவியல்களின் பிரதிநிதியாக அவர் தன்னை நிறுவிக் கொள்கிறார். இதற்குக் காரணமில்லாமல் இல்லை. ரஷ்ய கம்யூனிச புரட்சிக்குப் பிறகு நிகழ்ந்த பொதுமக்களின் தொழில்துறை உயர்வுகள், அவர்களது ஆன்மீக உயர்வுகளுக்கு வித்திடவில்லை. ரஷ்ய நாட்டில் தூக்கியெறியப்பட்ட முதலாளித்துவ மற்றும் பூர்ஷுவா வர்க்க அறங்களை, கிறித்துவ மதம், ரஷ்ய மக்களின் மனங்களில் Read More