திட்டம் இரண்டு (2021) திரைப்படம் எதன் அடிப்படையில் ட்ரான்ஸ்போபியா?

மாற்றுப்பாலினத்தவரின் தினசரிகளோ அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சமூக நெருக்கடிகளோ ஆவணப்படுத்தப்படாமல் ஒருதலைக் காதலின் போராட்டம் என்னும் பெயரில் (அதுவும் சிறுவயதில் முதன் முதலாக எதிர்கொள்ளும் பாலீர்ப்பு காதலின் நீட்சியாகவே கதை தொடர்கிறது) அவர்களின் பாலினத்தை பரிதாபகரமாக காட்ட முனைந்து இறுதியில் Transphobic பார்வையில் “ஆள் மாறாட்ட மோசடியாக” காட்சிப்படுத்தி கதையை நகர்த்துகிறார் இயக்குனர்.பாலின அடையாள நெருக்கடியிலுள்ளவரின் குரலை முன்நிலைப்படுத்தாமல் பார்வையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரே நோக்கில் திரைப்படம்  உருவாக்கப்பட்டுள்ளது. படம் பாலின மாற்று அறுவை சிகிச்சையைப் (gender reassignment surgery ) புதிதாக தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்த முனையும் தொனியில்  எதிர்பாராத அதிர்ச்சியை மட்டுமே பின்புலமாக வைத்து (அந்த அதிர்ச்சியும் அறுவை சிகிச்சை மூலம் ஓர் பெண் ஆணாக மாறியுள்ளார் பாருங்கள் என்கிற வினோதத்தன்மை பொருந்திய ஆச்சர்யத் தொனியுடன்) thriller elements மூலம் பார்வையாளர்களை exploit செய்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை ஆதிரா கதாப்பாத்திரம் (ஐஸ்வர்யா ராஜேஷ்) போலீசாக இருந்தும் ஒரு பெண்ணாக க்ளைமேக்ஸ் வரை மாற்றுப்பாலினமாக காட்சிப்படுத்தப்படும் ஆண்  கதாப்பாத்திரம் மற்றும் டாக்டர்,போலீஸ் என ஒரு கூட்டத்தால் அலைக்களிக்கப்பட்டு ஏமாற்றப்படுகிறார். இத்தனையும் எதற்காக?   மாற்றுப்பாலின சிகிச்சை மேற்கொண்ட நபர் தன் பிறப்பு பாலினஅடையாளத்தை மட்டுமல்லாது தன் பிறந்து வாழ்ந்த முழுச் சுவட்டையுமே அழித்து தான்கொல்லப்பட்டதாக புனைந்து குடும்பம், சமூகம் என அத்தனை பேருக்கும் பயந்து அனைவரையும் ஏமாற்றி தன் புது அடையாளத்தை நிறுவிக்கொள்ள.இன்னும் தான் சிறுவயதிலிருந்து ரகசியமாக விரும்பிய பெண்ணை அடைந்து Read More